என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்
நீங்கள் தேடியது "ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்"
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2018-19 நான்காவது நிதியாண்டில் மட்டும் ரூ.840 கோடி வருவாய் ஈட்டியிருக்கிறது. #RelianceJio
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2018-19 நான்காவது நிதியாண்டு காலக்கட்டத்தில் மட்டும் ரூ.11,106 கோடி வருவாய் ஈட்டியிருக்கிறது. இது முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும் போது 7 சதவிகிதம், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 55.8 சதவிகிதம் அதிகம் ஆகும். இதில் நிகர லாபம் மட்டும் ரூ.840 என ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது.
இதுதவிர மார்ச் 31, 2018 வரையிலான காலக்கட்டத்தில் ஜியோ சேவையை சுமார் 30.67 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். முந்தைய காலாண்டில் ஜியோ பயனர் எண்ணிக்கை 28.01 கோடியாக இருந்தது. இதன் மூலம் உலகில் அதிவேகமாக 30 கோடி பயனர்களை கடந்த முதல் நிறுவனமாக ஜியோ இருக்கிறது.
இந்த காலாண்டில் மட்டும் ஜியோ சேவையை பயன்படுத்துவோரிடம் இருந்து மாதம் ரூ.126.2 வருவாயை ஜியோ பெற்றிருக்கிறது. இதே காலக்கட்டத்தில் மொத்த வயர்லெஸ் டேட்டா பயன்பாடு 956 கோடி ஜி.பி.யாகும். இதில் வாய்ஸ் கால் மட்டும் தினமும் 72,414 கோடி நிமிடங்களும், ஒரு பயனர் மாதம் 823 நிமிடங்கள் பயன்படுத்தி இருக்கின்றனர். வீடியோ தரவு பயன்படுத்துவோர் மாதம் 500 கோடி மணி நேரங்களும், பயனர் ஒரு மாதத்தில் சராசரியாக 10.9 ஜி.பி. டேட்டா பயன்படுத்தி இருக்கின்றனர்.
ஜியோ தனது ஜியோஜிகாஃபைபர் சேவைகளை கடந்த ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் தேதி அறிவித்தது. இந்தியா முழுக்க 1600 நகரங்களில் ஜியோஜிகாஃபைபர் சேவைகள் ஹோம் பிராட்பேண்ட், என்டர்டெயின்மென்ட், ஸ்மார்ட் ஹோம், வயர்லைன் மற்றும் வர்த்தக சேவைகள் அறிவிக்கப்பட்டன.
தற்சமயம் ஜியோ தனது சேவைகளை பல்வேறு தளங்களில் சீராக இயங்க வைக்கும் பணிகளில் ஈடுபட்டு இருக்கிறது. இந்தியாவில் ஃபிக்சட் பிராட்பேண்ட் சந்தையை உருவாக்கும் பணிகளில் ஜியோ தீவி்ரப்படுத்தியிருக்கிறது. இதே ஆண்டில் ரிலையன்ஸ் ரீடெயில் இந்தியா முழுக்க 76 புதிய டிஜிட்டல் ஸ்டோர்களையும், 2219 ஜியோ ஸ்டோர்களை திறந்திருக்கிறது.
இந்தியாவில் அமேசான் வலைதளத்திற்கு போட்டியாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஜியோ இணைந்து புதிய சேவையை துவங்க இருக்கின்றன. #relianceindustries
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் சொந்தமாக ஆன்லைன் வலைதளம் ஒன்றை துவங்க இருக்கிறது. புதிய வலைதளம் இந்தியாவில் அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.
ஜியோ டெலிகாம் சேவை, மொபைல் சாதனங்கள் மற்றும் ரீடெயில் வர்த்தக நெட்வொர்க் உள்ளிட்டவற்றை ஒன்றிணைத்து உலகின் முன்னணி ஆன்லைன் வலைதளங்களை எதிர்கொள்ள முகேஷ் அம்பானி திட்டமிட்டுள்ளர்.
ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடெயில் ஒன்றிணைந்து பிரத்யேகமாக புதிய ஆன்லைன் வலைதளத்தை துவங்கி, குஜராத்தில் இருக்கும் சுமார் 12 லட்சம் சிறு வணிகர்களை ஊக்குவிக்க இருப்பதாக முகேஷ் அம்பானி தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ரிலையன்ஸ் ஜியோ சேவையை இதுவரை சுமார் 28 கோடி வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். ரிலையன்ஸ் ரீடெயில் முணையங்கள் இந்தியா முழுக்க சுமார் 6,500 நகரங்களில் 10,000 விற்பனை மையங்களாக இயங்கி வருகின்றன.
புதிய ஆன்லைன் வர்த்தகத்தில் வியாபாரிகளை சேர்க்க ஜியோவின் செயலிகள் மற்றும் சாதனங்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன என்று ரிலையன்ஸ் ரீடெயில் மூத்த அதிகாரியான வி. சுப்ரமணியம் தெரிவித்தார்.
வெளிநாட்டு ஆன்லைன் வர்த்தக தளங்கள் முதலீடு செய்திருக்கும் நிறுவனங்களின் பொருட்களை பிரத்யேகமாக விற்பனை செய்யவோ, சிறப்பு சலுகைகள் வழங்கவும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த விதிமுறைகள் மூலம் அமேசான் மற்றும் வால்மார்ட் கைப்பற்றியிருக்கும் ப்ளிப்கார்ட் நிறுவன வியாபாரங்களை வெகுவாக பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழும நிறுவன தலைவரான முகேஷ் அம்பானி முதலிடத்தில் நீடிக்கிறார். #MukeshAmbani
அமெரிக்காவின் நியூ யார்க் நகரை தலைமையிடமாக கொண்டு ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியாகி வருகிறது. மாதம் இருமுறை வெளியாகும் இந்த பத்திரிகையில் உலக சாதனையாளர்கள் பட்டியல் அடிக்கடி வெளியிடப்படுகிறது.
அந்த வகையில் இந்தியாவில் 2018 ஆம் ஆண்டு முன்னணியில் உள்ள கோடீஸ்வரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 100 கோடீஸ்வரர்கள் இந்த பட்டியலில் இடம் பெற்று உள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டின் இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
முதன் முறையாக முதல் 100 கோடீஸ்வரர்களில் 4 பெண் தொழிலதிபர்கள் இடம் பெற்று உள்ளனர். இந்தியாவின் முதல் பெரிய கோடீஸ்வரராக முகேஷ் அம்பானி திகழ்கிறார். 61 வயதாகும் இவர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் ஆவார்.
கடந்த 11 ஆண்டுகளாக தொடர்ந்து அவர் முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அவரது தற்போதைய சொத்து மதிப்பு 3 லட்சத்து 31 கோடி ரூபாய் ஆகும். நடப்பாண்டில் மட்டும் அவரது சொத்து மதிப்பு 65 ஆயிரத்து 100 கோடி ரூபாய் அதிகரித்து உள்ளது.
முகேஷ் அம்பானியை தொடர்ந்து விப்ரோ நிறுவனத்தின் அசிம்பிரேம்ஜி 2 ஆவது கோடீஸ்வரராக இருக்கிறார். அவரது சொத்து மதிப்பு 1 லட்சத்து 47 கோடி ரூபாய் ஆகும். தொழிலதிபர் லட்சுமி மிட்டல் 3 ஆவது இடத்தில் இருக்கிறார். 4 ஆவது இடத்தில் அசோக் லேலண்டின் இந்துஜா சகோதரர்கள், 5 ஆவது இடத்தில் பலோன்ஜி மிஸ்ட்ரி உள்ளார்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி மான்சூன் ஹங்காமா என்ற பெயரில் புதிய சலுகையை அறிவித்திருக்கிறார். இதில் பயனர்கள் ஜியோபோனினை ரூ.501 விலையில் பெற முடியும்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வழங்கினார். ஜியோபோன் 2, ஜியோ ஜிகாஃபைபர் அறிவிப்புகளுடன் ஜியோபோன் சார்ந்த தகவல்களையும் அவர் வெளியிட்டார்.
கடந்த ஆண்டு ஜியோ அறிமுகம் செய்த ஜியோபோன் வாங்குவோருக்கு மான்சூன் ஹங்காமா என்ற பெயரில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையின் கீழ் பயனர்கள் ரூ.501 மட்டும் செலுத்தி ஜியோபோன் பெற முடியும். பயனர்கள் ஏற்கனவே பயன்படுத்தி வரும் ஃபீச்சர்போனினை வழங்கி, புதிய ஜியோபோனுக்கு ரூ.501 மட்டும் செலுத்தி வாங்கிட முடியும். இந்த சலுகை ஜூலை 21, 2018 முதல் வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோபோன் அறிமுகம் செய்யப்பட்டது. பயனர்கள் ரூ.1,500 செலுத்தி புதிய ஜியோபோன் வாங்கி மூன்று ஆண்டுகளில் அதனை திரும்ப வழங்கி முன்பணத்தை திரும்ப பெற முடியும். அந்த வகையில் ஜியோபோன் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இன்று (ஜுலை 5) நடைபெற்ற ரிலையன்ஸ் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் ஜியோபோனில் விரைவில் மேம்படுத்தப்பட்ட ஃபேஸ்புக், யூடியூப் மற்றும் வாட்ஸ்அப் செயலிகளை பயன்படுத்துவதற்கான அப்டேட் வழங்கப்பட இருப்பகாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோபோனில் 2.4 இன்ச் QVGA TFT டிஸ்ப்ளே, டூயல்-கோர் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.
ஜியோபோனில் 512 எம்பி ரேம், 4 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. 4ஜி வோல்ட்இ நெட்வொர்க், ஜியோ செயலிகள் ப்ரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கிறது. இத்துடன் 24 இந்திய மொழிகளில் ஜியோபோன் பயன்படுத்தும் வசதி மற்றும் வாய்ஸ் கமான்ட் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோவின் பிராட்பேன்ட் சேவையான ஜியோ ஜிகாஃபைபர் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய பிராட்பேன்ட் சேவை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ ஜிகாஃபைபர் சேவையை அறிமுகம் செய்துள்ளது. ஃபைபர் டு ஹோம் பிராட்பேன்ட் (FTTH) சேவை ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் அந்நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி அறிமுகம் செய்தார்.
ஜியோவின் பிராட்பேன்ட் சேவைகள் நாடு முழுக்க 1,100 நகரங்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஜியோ ஜிகாஃபைபருடன் ஜிகாஃபைபர் ரவுட்டர், ஜியோ ஜிகா செட்-டாப் பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த செட்-டாப் பாக்ஸ் கொண்டு மற்ற ஜிகா டிவி சாதனம் மற்றும் அனைத்து நெட்வொர்க் மொபைல் இணைப்புகளிலும் வீடியோ கால் மேற்கொள்ள முடியும்.
ஜியோ ஜிகாஃபைபர்
பீட்டா முறையில் சோதனை செய்யப்படுவதை தொடர்ந்து ஜிகாஃபைபர் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. நொடிக்கு அதிகபட்சம் 1 ஜிபி வேகம் (1Gbps) வழங்கும் புதிய பிராட்பேன்ட் சேவையானது உலகின் மிகப்பெரிய பசுமைவழி பிராட்பேன்ட் சேவையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பயனர்கள் தங்களின் வி.ஆர். ஹெட்செட்களை ஜியோ ஜிகாஃபைபர் நெட்வொர்க்கில் இணைத்து தகவல்களை 4K ரெசல்யூஷனில் 360 கோணங்களில் பயன்படுத்த முடியும் என ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன தைலவர் கிரன் தாமஸ் தெரிவித்தார்.
ஜியோ ஜிகாஃபைபர் சேவைக்கான முன்பதிவுகள் ஆகஸ்டு 15-ம் தேதி துவங்குகிறது. பயனர்கள் மைஜியோ செயலி மற்றும் ரிலையன்ஸ் ஜியோ அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ஜியோ ஜிகாஃபைபர் சேவைக்கு முன்பதிவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகப்படியான முன்பதிவுகளை பெறும் அடிப்படையில் சேவைகள் வழங்கப்பட இருக்கிறது.
ஜிகா டிவி சேவையை பொருத்த வரை சந்தாதாரர்கள் வாய்ஸ் கமான்ட் வசதி கொண்ட டிவி ரிமோட் மூலம் ஜியோ செயலிகளை பயன்படுத்த முடியும். ஜியோஃபைபர் இணைப்பு பெற்றிருக்கும் மற்ற டிவிக்களுக்கு கால் செய்ய முடியும் என இஷா அம்பானி தெரிவித்தார். இது ஜியோ நெட்வொர்க்-இன் தலைசிறந்த அனுபவமாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் ஜியோ சேவை துவங்கிய 22 மாதங்களில் சுமார் 21.5 கோடி பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் ஜியோபோன் சாதனத்தை சுமார் 2.5 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர்.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன ஆண்டு பொதுக்குழு நிகழ்வில் ஜியோபோன் 2 அறிமுகம் செய்யப்பட்டது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
இந்தியாவில் ரிலைன்ஸ் ஜியோவின் ஜியோபோன் 2 அறிமுகம் செய்யப்பட்டது. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான அறிவிப்பை அந்நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி வெளியிட்டார்.
க்வெர்டி கீபோர்டு கொண்டிருக்கும் ஜியோபோன் 2 மாடலில் 2.4 இன்ச் QVGA டிஸ்ப்ளே, 4 புறமும் சுழலும் நேவிகேஷன் பட்டன், 2 எம்பி பிரைமரி மற்றும் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. முந்தைய ஜியோபோன் போன்றே இந்த மாடலிலும் 4ஜி வோல்ட்இ, கை ஓஎஸ் (Kai OS), வழங்கப்பட்டு இருக்கிறது.
மெமரியை பொருத்த வரை 512 எம்பி ரேம், 4 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. வோல்ட்இ வசதியுடன், வோ-வைபை வசதி, எஃப்.எம்., வைபை, ஜிபிஎஸ், என்.எஃப்சி. உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
2000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ஜியோபோன் 2 மாடிலில், அனைத்து ஜியோ செயலிகளும் ப்ரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கிறது. இத்துடன் 22 இந்திய மொழிகளில் புதிய ஜியோபோனினை பயன்படுத்த முடியும்.
ஜியோபோன் 2 சிறப்பம்சங்கள்:
- 2.4 இன்ச் QVGA TFT டிஸ்ப்ளே
- டூயல் கோர் பிராசஸர்
- 512 எம்பி ரேம்
- 4 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 2 எம்பி பிரைமரி கேமரா
- 2 எம்பி செல்ஃபி கேமரா
- 4ஜி வோல்ட்இ, வோ-வைபை, ஜிபிஎஸ்
- 2000 எம்ஏஹெச் பேட்டரி
புதிய ஜியோபோன் 2 விலை ரூ.2,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஆகஸ்டு 15-ம் தேதி முதல் துவங்குகிறது. ஜியோபோன் 2 அறிமுக நிகழ்விலேயே பழைய ஜியோபோனில் ஃபேஸ்புக், யூடியூப் மற்றும் வாட்ஸ்அப் வசதிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அமெரிக்காவை சேர்ந்த டெலிகாம் நிறுவனத்தை கைப்பற்றி இந்தியாவில் 5ஜி மற்றும் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் சேவைகளை வழங்க இருக்கிறது.
இந்தியாவில் 5ஜி மற்றும் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் சேவைகளை முழுமையாக வழங்க ரிலையன்ஸ் ஜியோ அமெரிக்க நிறுவனத்தை கைப்பற்ற இருப்பதாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ராடிசிஸ் கார்ப்பரேஷன் டெலிகாம் சேவை மற்றும் உதிரிபாகங்களை தயாரித்து வழங்கும் நிறுவனத்தை ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் கைப்பற்ற இருக்கிறது. ராடிசிஸ் நிறுவனத்தை 7.5 கோடி அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.510 கோடி) கொடுத்து ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் வாங்க இருக்கிறது.
இதன் மூலம் இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு 5ஜி மற்றும் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் சேவைகளை விரிவாக வழங்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பங்கு ஒன்றுக்கு 1.72 டாலர்கள் வீதம் கட்டணமாக செலுத்த இருக்கிறது. ராடிசிஸ் நிறுவனத்தை கைப்பற்றுவதன் மூலம் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம் மட்டுமின்றி தொழில்நுட்ப நிறுவனமாகவும் உருவெடுக்கும்.
கோப்பு படம்
அமெரிக்க நிறுவனத்தை கைப்பற்றுவதன் மூலம் சர்வதேச சந்தையில் 5ஜி, இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் மற்றும் ஓபன் சோர்ஸ் ஆர்கிடெட்ச்சர் அடாப்ஷன் உள்ளிட்ட பிரிவுகளில் புதுமைகளை கண்டறியும் தொழில்நுட்ப நிறுவனமாக ஜியோ உருவெடுக்கும் என ரிலையன்ஸ் ஜியோ நிறுவன தலைவர் ஆகாஷ் அம்பானி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
புதிய நிறுவனத்தை கைப்பற்ற ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிதி வழங்க இருக்கிறது. ராடிசிஸ் நிறுவனம் மென்பொருள், வன்பொருள், டெலிகாம் சேவை வழங்குவோருக்கு சேவை மற்றும் உபகரணங்களை வழங்கி வருகிறது. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் மற்றும் ராடிசிஸ் நிறுவனங்களிடையேயான ஒப்பந்தம் 2018 நான்காம் காலாண்டு வாக்கில் நிறைவுற இருக்கிறது.
மார்ச் 2018 காலாண்டு வாக்கில் ராடிசிஸ் நிறுவனம் 64 லட்சம் டாலர்கள் நஷ்டமடைந்து, வருவாய் ரீதியாக 2.62 கோடி டாலர்கள் இழந்தது. அமெரிக்காவின் ஆரிகான் பகுதியை சார்ந்த ராடிசிஸ் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி ஆலையை கொண்டிருக்கிறது. பெங்களூருவில் இயங்கும் இந்த ஆலையில் மொத்தம் 600 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பொறியாளர் குழு, விற்பனை மற்றும் சேவை பிரிவுகள் இயங்கி வருகின்றன.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X